கோவை: கோவையில் மோசடி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 76 ஆயிரம் பேரின் விவரங்களை சேகரிக்கும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை பீளமேட்டில் யுடிஎஸ் என்ற பெயரில் 2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவந்த நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகர அறிவிப்புகளை நம்பி, பல்வேறு திட்டங்களில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 76 ஆயிரம் பேர் பணத்தை முதலீடு செய்தனர். இந்நிலையில், அறிவித்தபடி பணத்தை தரவில்லை என முதலீட்டாளர்கள் பலர் புகார் அளித்தனர். நிறுவனமும் மூடப்பட்டது.
இதையடுத்து, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சூலூரை சேர்ந்த ரமேஷ் (30) மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்த முதலீட்டு தொகை ரூ.1,300 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது வரை 31 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர்.
டிஎஸ்பி முருகானந்தம் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜசேகர், லட்சுமி, மகேஸ்வரி மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
» பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று விண்ணப்ப பதிவு தொடக்கம்
» டாஸ்மாக் நிறுவனத்தில் 1 லட்சம் கோடி ஊழலா? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
தனிப்படை போலீஸார் கூறும்போது, ‘‘அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 76 ஆயிரம் பேரின் விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை சேகரித்து, அவர்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு, இழந்த தொகை எவ்வளவு என்பன குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுகுறித்து உரிய வழிகாட்டுதல் வழங்க பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. அங்கித் ஜெயின் கோவைக்கு வர உள்ளார்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago