ராணிப்பேட்டை | கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சிப்காட்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்களில் ஒருவர் விஷவாயு தாக்கி பரிதாப மாக உயிரிழந்தார். மேலும், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் சத்து வாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர், ராணிப் பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தொழிலாளர்களை வர வழைத்தார்.

வேலூர் அடுத்த சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (40), ராணிப்பேட்டை அடுத்த புலியூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (40), வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (25), வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (40) உட்பட 8 பேர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நேற்று காலை சென்றனர்.

அதில், தமிழ்செல்வன் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற மகேந்திரன், ராமதாஸ், ராஜா ஆகியோர் தொட்டியில் இறங்கியபோது அவர்களும் மயக்கமடைந்தனர். உடனே, சக தொழிலாளர்கள் 4 பேரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தமிழ் செல்வன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகவும், மற்ற 3 பேருக்கும் பெரிய பாதிப்பு இல்லை என்பதால் அவர்களை சிகிச்சைக்காக அனுமதிக்க அறிவுறுத்தினர்.

அதன்படி, மகேந்திரன், ராஜா மற்றும் ராமதாஸ் ஆகிய 3 பேரும் வாலாஜா அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷவாயு தாக்கி உயிரிழந்த தமிழ்செல்வனுக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்