சென்னை: ரகள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்அழகுராஜா. இவர் சட்டவிரோதமாக பணம், நகைகளை கொண்டு செல்லும் குருவியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அழகுராஜா சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாக சென்னைக்குவந்துள்ளார். பின்னர், மண்ணடியிலிருந்துரூ.30 லட்சம் ஹவாலா பணத்துடன் திருவல்லிக்கேணி நோக்கி இருசக்கர வாகனத்தில் இரு தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.
அப்போது மன்றோ சிலை அருகே போலீஸ் சீருடையில் நின்றிருந்த இருவர்,தங்களை போலீஸ் எனக்கூறி அழகுராஜாவை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். அப்போது, அவரிடம் ரூ.30 லட்சம் இருப்பது தெரியவந்ததையடுத்து பணத்துக்கான ஆவணத்தை கேட்டுள்ளனர். அழகுராஜாவிடம் முறையான ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்வதாகக் கூறி பணத்துடன் தப்பினர்.
அதிர்ச்சியடைந்த அழகுராஜா, இது குறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். சம்பவஇடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராகாட்சிகளை ஆய்வு செய்தனர். அதில்,ரூ.30 லட்சம் ஹவாலா பணத்தை பறித்து தப்பியது ஆயுதப்படை காவலர்செந்தில், அவரது நண்பர் டைசன் என்பதுதெரிந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
16 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago