சென்னையில் பதுக்கப்பட்ட பழங்கால உலோகச் சிலைகள் பறிமுதல்: அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணுக்கு சம்மன்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், 1-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த சோபா துரைராஜன் என்பவர் வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நடத்திய திடீர் சோதனையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 பழங்கால உலோகச் சிலைகள், ஓவியம் மற்றும் மரச்சிற்பங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், சிலைக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய மறைந்த தீனதயாளன் நடத்திவந்த அபர்ணா ஆர்ட் கேலரியில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரையிலான காலக்கட்டத்தில் வாங்கியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ``தற்போது சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர் சோபா துரைராஜன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவரது சென்னை வீட்டிலிருந்து ஏற்கனவே 72 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிலைகளில் பெரும்பாலானவை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடமிருந்து வாங்கப்பட்டுள்ளன. எனவே, சிலை கடத்தலில் சோபா துரைராஜனுக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்க உள்ளோம். எனவே, அவர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளோம்'’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

மேலும்