உடுமலை: உடுமலை அரசு மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது. உடுமலை அருகே கோட்டமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று இரவு சிகிச்சைக்காக உடுமலை அரசுமருத்துவமனைக்கு காரில் வந்துள்ளார்.
காரை மருத்துவமனை முன் நிறுத்திச் சென்றார். சில மணி நேரங்களில் காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அப்போது காற்று பலமாக வீசியதால் கார் தீப்பிடித்தது. இதனை கண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பு கருதி, காரின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
23 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago