திருத்தணி | விஏஓ-வை பணிசெய்ய விடாமல் தடுத்த அருங்குளம் ஊராட்சி தலைவரின் கணவர் கைது

By செய்திப்பிரிவு

திருத்தணி: திருத்தணி அருகே விஏஓ-வை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஊராட்சித் தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள அருங்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் சரண்யா. அதிமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் முரளிதான் ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தொந்ததரவு செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் அருங்குளம் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ரகுவரனை, தகாத வார்த்தைகளால் பேசி, கிராம சபை கூட்ட தீர்மான புத்தகத்தில் கையெழுத்து போட விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் முரளி மீது ரகுவரன் புகார் அளித்தார். இதன்பேரில் அரசு ஊழியரை அரசு பணிசெய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முரளி மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்