கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சுவாமிமலை பகுதியிலுள்ள கொள்ளிடம், காவிரி ஆற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் சட்டத்திற்கு விரோதமாக மணல் ஏற்றி வந்த 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 மாட்டுவண்டிகளை நேற்று இரவு பறிமுதல் செய்தனர்.
சுவாமிமலை காவல் சரகத்திற்குட்பப்ட்ட பகுதிகளிலுள்ள கொள்ளிடம், காவிரி ஆறுகளிலிருந்து மாட்டு வண்டிகளில் நள்ளிரவில் சட்ட விரோதமாக மணல் ஏற்றி வருவதாக, சுவாமிமலை காவல் நிலையத்திற்குத் தகவல் வந்தது.
இதனையடுத்து, காவல் ஆய்வாளர் க.சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீஸார், சுவாமிமலை சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது திருப்புறம்பியம் கொள்ளிடம் ஆற்றில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சிவா(26), கங்காதாராபுரம், த தங்கசாமி மகன் கரும்பாயிரம்(49) மற்றும் பம்பப்படையூரைச் சேர்ந்த துரைசாமி மகன் ராமன்(52) ஆகிய 3 பேரும் சட்டத்திற்கு விரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீஸார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து, வழக்கு பதிந்து 3 , மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
34 mins ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago