ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் ஏப்.16-தேதி தனது வீட்டில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, பைக்கில் ஆயுதங்களுடன் வந்த இருவரை அவரது வீட்டிலிருந்த கட்சியினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் அரிவாளால் வெட்டியதில் தரணி முருகேசனிடம் பணியாற்றும் ஊழியர் கணேசன் காயமடைந்தார்.
பின்னர் ஆயுதங்களுடன் வந்த சென்னை எண்ணூரைச் சேர்ந்த மோகன்(34), புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ்(34) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கூலிப்படையினரான இவர்கள் தரணி முருகேசனை கொலை செய்ய வந்தது தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின்படி முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் கதிரவனின் கார் ஓட்டுநர் பாலமுருகன், அவரது ஆதரவாளர் விக்னேஸ்வரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கதிரவன், பாஜக வழக்கறிஞர் சண்முகநாதன் ஆகியோரை தேடி வந்தனர்.
இந்நிலையில், கேணிக்கரை காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படையினர் வழக்கறிஞர் சண்முகநாதனை சென்னையில் கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் ஜே.எம்.எண்.2 நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிரபாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சண்முகநாதனை மே 23 வரை மதுரை மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். கதிரவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
» என்எல்சிக்கு உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவை - மின்உற்பத்தி பாதிப்பதாக நிறுவன தலைவர் தகவல்
» அதிகாரிகளின் தலையீடுகளால் தேசிய கல்விக் கொள்கையாக மாறும் மாநில கல்விக் கொள்கை
முக்கிய செய்திகள்
க்ரைம்
25 mins ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago