நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி அருகே திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர், அவரது மகனை போலீஸார் கைது செய்து தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடியைச் சேர்ந்தவர் புல்லட் மகாலிங்கம் என்கிற மகாலிங்கம் (56). திமுகவைச் சேர்ந்த இவர், விழுந்தமாவடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவரது மகன் அலெக்ஸ் (31). கீழையூர் ஒன்றிய குழு திமுக உறுப்பினர்.
இந்நிலையில், தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், நாகை எஸ்.பி. ஜவஹருக்கு கொடுத்த தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விழுந்தமாவடியில் உள்ள மகாலிங்கம் வீட்டில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். ஆனால், அவரது வீட்டில் இருந்துஎதுவும் கைப்பற்றப்படவில்லை.
இருந்தபோதிலும், மகாலிங்கம், அவரது மகன் அலெக்ஸ் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பின், அவர்களை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று, சென்னையிலிருந்து கடலூருக்கு வந்திருந்த தேசிய போதைப் பொருள் தடுப்பு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: டெல்லியில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ஒரு காரில் இருந்து ‘ஐஸ் மச்சா’ என்ற போதைப் பொருளை அண்மையில் பறிமுதல் செய்தனர். கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் அந்தப் போதைப் பொருளை நாகை மாவட்டம் விழுந்தமாவடி ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கத்திடம் ஒப்படைக்க இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் அளித்த தகவலின்பேரில், மகாலிங்கம், அவரது மகன் அலெக்ஸ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளோம் என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago