திருப்பூர் | கழிவறை குத்தகைதாரரின் மகனை கடத்தி பணம் கேட்ட 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருப்பூர்: புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையை சேர்ந்தவர் மருதமுத்து. இவர், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் கட்டண கழிப்பிடங்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்நிலையில், மருதமுத்துவின் மகன் கண்ணன் (26), குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள கழிப்பிடங்களுக்கு சென்று நாள்தோறும் பணம் வசூலித்து வந்தார்.

நேற்று காலை பணம் வசூலிக்க இருசக்கர வாகனத்தில் லட்சுமி நகருக்கு சென்றுள்ளார். அப்போது, வாகனத்தை மறித்து மர்ம நபர்கள் அவரை கடத்தினர். மேலும், அவரது தாயாரிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக மருதமுத்து அளித்த புகாரின்பேரில் திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதையடுத்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தில் கண்ணனை மீட்டனர்.

லட்சுமி நகர் கழிப்பிடத்தில் பணிபுரியும் ஹனிபா (51) என்பவருக்கு பணத் தேவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது நண்பர்கள் கார்த்திக் (36), சஞ்சீவ் (32), லட்சுமணன் (37) ஆகியோருடன் சேர்ந்து கண்ணனை காரில் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து 4 பேரை வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்