ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 350 கிலோ எடையுள்ள சுறா மீன் துடுப்புகளை, வனத் துறையினர் பறிமுதல் செய்து 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனத் துறையினருக்கு கிடைத்த தகவலின்படி ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கார் ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்த மூட்டைகளை, உதவி வனப் பாதுகாவலர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத் துறையினர் சோதனையிட்டனர். அதில், 15 மூட்டைகளில் 350 கிலோ எடையுள்ள ராட்சத சுறா மீன்களின் துடுப்புகள் (பீலிகள்) காய வைக்கப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வனத் துறையினர் சுறா துடுப்புகளையும், காரையும் பறிமுதல் செய்தனர். இவை பல லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என வனத் துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மண்டபம் வேதாளையைச் சேர்ந்த ஒருவர், திருப்புல்லாணியைச் சேர்ந்த ஒருவரையும், விசாரணைக்காக வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அதில், சுறா துடுப்புகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயலில் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இவை எதற்காக இங்கு கொண்டுவரப்பட்டன. இங்கிருந்து இலங்கைக்குக் கடத்தப்படுவதற்காக? என வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சுறா துடுப்புகள் சீனா, தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் மருந்து பொருட்கள் தயாரிக்கப் பயன்படுவதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago