கடலூர் | கொன்று புதைக்கப்பட்ட இளைஞர் உடல் தோண்டி எடுப்பு: ஒருவர் கைது, மேலும் சிலர் தலைமறைவு

By செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் அருகே கொன்று புதைக் கப்பட்ட இளைஞரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கொலையில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை போலீஸார் சென்னை விரைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ரெட்டிச் சாவடி அருகே புதுக்கடை கிராமத் தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் அன்பரசன் (25). இவர் புதுச்சேரி மாநிலம் சேர்க்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அன்பரசன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது பெற்றோர் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன அன்பரசனை தேடி வந்தனர். மேலும் புதுக்கடை பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடந்த 2-ம் தேதி அன்பரசனை சிலர்அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை போலீ ஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சிசிடிவி கேமராகாட்சியில் பதிவாகி இருந்த ஒருஇளைஞரை போலீஸார் பிடித்துவிசாரணை நடத்தினர். விசாரணை யில், அவர் புதுக்கடையைச் சேர்ந்த சந்தோஷ் (20) என்பதும், அவர் தனது நண்பருடன் சேர்ந்துஅன்பரசனை கொன்று புதைத்ததும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், புதுச்சேரியில் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் அன்பரசன், சந்தோஷ் உள்ள ரவுடி கும்பலில் இருந்து எதிர் தரப்பு ரவுடி கும்பலுக்கு அடிக்கடி தகவல் தெரிவித்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் கடந்த 2-ம் தேதி இரவு பணி முடிந்து வந்த அன்பரசனை, சந்தோஷ் உள்ளிட்ட சிலர் சிங்கிரிகுடி சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மது அருந்தினர். பின்னர் சந்தோஷை கட்டையால் தலையில் அடித்து கொன்று அங்கேயே புதைத்தது தெரியவந்தது.

இதையடுத்து அன்பரசனை கொன்று புதைத்த இடத்தை சந்தோஷ் அடையாளம் காட்டினார். கடலூர் வட்டாட்சியர் அபிநயா தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் புதுச்சேரி பிம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக் குழுவினர் கொன்று புதைக்கப்பட்ட அன்பரசனின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

சம்பவ இடத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க, கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டிருந்தனர். இந்த சம்பவத்தில் தொடர் புடைய மேலும் சிலர் சென்னை யில் பதுங்கி இருப்பதாக போலீ ஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் தனிப்படை போலீஸார் சென்னைக்கு விரைந் துள்ளனர். அவர்களை கைது செய்த பின்னரே இந்த வழக்கின் முழு விவரமும் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

மேலும்