கள்ளச் சந்தையில் மது விற்கும் நபரிடம் லஞ்சம் - 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

By செய்திப்பிரிவு

திருவாரூர்: டாஸ்மாக் மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் நபரிடம் லஞ்சம் வாங்கிய 2 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்டஎஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த களப்பால் பகுதியில் கடந்த ஏப்.27-ம் தேதி இரவு திருக்களார் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர்கலையரசன், முதல் நிலைக் காவலர் விஷ்ணு ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாட்டார் பகுதியைச் சேர்ந்த ராஜதுரைஎன்பவரை மறித்து சோதனைசெய்தபோது, அவர் 75 மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்யாமல் இருக்க அவரிடம் ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாகபெற்றுக்கொண்டு விடுவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், காவலர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர்கள் இருவரும் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை பணி யிடை நீக்கம் செய்து எஸ்.பி. நேற்று உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE