விருதுநகர் | போக்சோ வழக்கில் தம்பதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் போக்சோ வழக்கில் தம்பதிக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவரது மனைவி நதியா (32). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயது சிறுவனை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மறைத்து, அதற்கு உடந்தையாக செயல்பட்டதாக சரவணன், அவரது மனைவி நதியா ஆகியோர் மீதும் போக்சோ வழக்குப் பதிவுசெய்யப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். சிறுவன் மீதான போக்சோ வழக்கு விசாரணை தனியாக நடந்து வரும் நிலையில், சரவணன் மற்றும் நதியா மீதான போக்சோ வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சரவணனுக்கும் அவரது மனைவி நதியாவுக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்