கிரிக்கெட் போட்டி நடக்கும்போது கைவரிசை - ‘புல்லட்’ திருடர்கள் 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுமுன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள்மோதிய போட்டி நடைபெற்றது. அதைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர்.

பெரும்பாலான ரசிகர்கள் இருசக்கர வாகனங்களிலும் வந்திருந்தனர். வந்தவர்களில் சிலர்தங்களது வாகனங்களை சேப்பாக்கம் ரயில் நிலையம் அருகே நிறுத்தி இருந்தனர்.

அதில், புல்லட் வகை இருசக்கர வாகனத்தை, கொள்ளையர்கள் இருவர் திருடினர். இதை பார்த்த அங்கிருந்த காவலாளி அவர்களை பிடித்து அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.

இதில், பிடிபட்டவர்கள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ்ராஜன் (55), பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மணி (40) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 10 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக புல்லட் மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடிவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 hours ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

10 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்