ஆருத்ரா, ஹிஜாவு வரிசையில் கோடிக்கணக்கில் நூதன பண மோசடி: அரும்பாக்கம் மோகா எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர்கள் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவனங்கள் வரிசையில் நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி கோடிக் கணக்கில் பண மோசடி செய்த கணவன், மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி பணம் தருவதாக கூறி ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் பலகோடி ரூபாய் மோசடி செய்தன. இதுகுறித்து தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து மோசடி நிதி நிறுவனங்களைச் சேர்ந்த 45 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை சர்வதேச போலீஸார் உதவியுடன் தேடி வருகின்றனர்.

இந்த மோசடி பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் மேலும்ஒரு நூதன மோசடி சம்பவம் அரங்கேற்றப்பட்டது. சென்னை அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த ‘மோகா எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயரிலான ஏற்றுமதி நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவன உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தில் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஒரு முறை முதலீடு செய்தால் போதும் மாதந்தோறும் வீடு தேடி மளிகை பொருட்கள் மொத்தமாக வரும்.

அதனை பிரித்து ‘பேக்கிங்’ செய்து வழங்கினால் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரைகமிஷன் வழங்கப்படும். ஓராண்டு முடிந்த பின்னர் முதலீட்டு பணமும் திரும்ப வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமாக தகவலை பரவவிட்டனர். இதனை நம்பி நடுத்தர குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டஇல்லத்தரசிகள் 500-க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் முதலீடுசெய்துள்ளனர். இந்த நிறுவனத்தை நடத்திய தம்பதியர் ஒரு சில மாதங்கள் மட்டும் கமிஷன் தொகை வழங்கிவிட்டு மீதமுள்ள பணத்தைசுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

கமிஷன் தொகை கிடைக்காத மக்களிடம் விரைவில் வழங்கப்படும் என்று ஊழியர்கள் மூலம் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் அவர்கள்அரும்பாக்கம் வீட்டை ஊழியர்கள் மூலம் அண்மையில் காலி செய்துகொண்டிருந்தனர். இதுபற்றி தகவலறிந்து பாதிக்கப்பட்டவர்கள் அங்குசென்றனர். ஊழியர்கள் சிலரை பிடித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தங்களை ஏமாற்றிய மோசடி தம்பதியரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று அரும்பாக்கம் காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்டபெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு கடந்த சனிக்கிழமை மதியம் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோசடியில் ஈடுபட்ட தம்பதியரை கைது செய்ய வேண்டும். தங்கள்பணத்தை மீட்டு தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் முழக்கமிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜான் பிரிட்டோ, காவல்ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் ஆகியோர் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட நிறுவனம், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துமுதலீட்டாளர்களின் பணத்தைதிரும்ப பெற்றுத்தருவோம் எனஉறுதி அளித்தனர். இதை அடுத்துபாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புகார் மனு எழுதி கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த புகார் மனுக்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த மோசடி தம்பதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மகாதேவ பிரசாத், அவரதுமனைவி ஜெய ஆகிய 2 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். கைதான மகாதேவ பிரசாத் திமுக பிரமுகர் என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்