மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி: திட்டக்குடி பாஜக நிர்வாகி கைது

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகியை திட்டக்குடி போலீஸார் கைது செய்தனர்.

திட்டக்குடி அடுத்த இடைச்செரு வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜயராஜ் (30). பொறியியல் பட்டதாரியான இவர் வேலை தேடிக் கொண்டி ருந்தார். இவர் கடந்த 15-12-2021அன்று ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தொழில் பிரிவு தலைவர் பெரியசாமி, இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்த பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவர் பழனிவேல் மற்றும் சிதம்பரத்தைச் சேர்ந்த தீபக் ஆகியோரை அணு கினார். அப்போது அவர்கள் ரூ.10 லட்சம் கொடுத்தால் மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக குறிப்பிட்டனர்.

இதைத்தொடர்ந்து முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத் தார். பின்னர் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ.9.5 லட்சம் பணத்தையும் செலுத்தினர். சில மாதங்கள் கடந்த பின்னரும் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை.

இதுகுறித்து விஜயராஜ் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார்அளித்தார். போலீஸார் பெரியசாமி,பழனிவேல், தீபக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி அவரது வீட்டில் இருப் பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை அங்கு சென்ற திட்டக்குடி போலீஸார் அவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்