சென்னை | வருமான வரி அதிகாரி வீட்டில் திருடியவர் சிறையிலடைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மேற்கு அண்ணாநகரில் உள்ள மத்திய அரசுஅதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் குடியிருப்பில் வசிப்பவர் ராமசுப்பிரமணியன் (29). இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரதுவீட்டில் கடந்த 26-ம் தேதிஅதிகாலை புகுந்த கொள்ளையன் வீட்டிலிருந்த 18 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு தப்பினார்.

இதுகுறித்து, ராமசுப்பிரமணியனின் மனைவி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில், ராமசுப்பிரமணியன் பணி நிமித்தமாக நிறுவனம் ஒன்றில் சோதனைக்கு சென்றபோது மர்ம நபர் அவரது வீட்டில் நுழைந்து திருட்டில் ஈடுபட்டு தப்பியது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் நகை திருட்டில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் (20) என்பவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்