ஜல்லிக்கட்டு ஆர்வலரை கடத்தி 34 பவுன் நகை பறிப்பு: கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலரை காரில் கடத்தி 34 பவுன் நகைகளை பறித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், 3 பேரை போலீஸார் தேடுகின்றனர்.

மதுரை அண்ணாநகரிலுள்ள சதாசிவ நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (35). ஜல்லிக்கட்டு ஆர்வலர். இவர் கடந்த 26-ம் தேதி பாண்டிகோயில் அருகே நண்பர் பாண்டி என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காரில் வந்த 4 பேர் கும்பல் கத்தி முனையில் பிரேம்குமாரை கடத்திச் சென்றது.

சிவகங்கை புதுப்பட்டி அருகே காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று, அவரை பணம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லை என அவர் கூறியும் விடாமல் அக்கும்பல் பீர்பாட்டில், அரிவாளால் தாக்கியது. அவர் தப்பிக்கும் நோக்கில் வீட்டில் நகைகள் உள்ளது. அதை வேண்டுமானால் தருகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரேம் குமார் அவரது நண்பர் பாண்டி மூலம் வீட்டில் இருந்த 34 பவுன் நகைகளை, கருப்பாயூரணி டாஸ்மாக் கடையில் வைத்து, கடத்தல் கும்பல் கூறிய நபரிடம் கொடுக்கச் செய்தார். இதைத்தொடர்ந்து, அக்கும்பல் கே.கே.நகர் பகுதியில் பிரேம்குமாரை அதிகாலை இறக்கி விட்டு தப்பியது.

வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டியதால் அவர் பயந்து கொண்டு இருந்துள்ளார். இருப்பினும், அக்கும்பல் தொடர்ந்து போனில் மிரட்டியதால் நேற்று காலை மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் பிரேம்குமார் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் போலீஸார் அக்கும்பல் குறித்து விசாரித்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலப்பனங்காடியைச் சேர்ந்த குண்டு சரவணன் (29) என்பவர், பிரேம் குமாரிடம் இருந்து பறித்த நகைகளை மதுரையில் விற்கச் சென்றபோது நேற்று பிடிபட்டார். விசாரணையில், அவர் உட்பட அவரது கூட்டாளிகள் சிவகங்கை மாவட்டம், புதுப்பட்டி தனசேகரன், தனபால், மேலப்பனங்காடி பாய்ஸ் மணி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

குண்டு சரவணனிடம் இருந்து 34 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான தனசேகரன் உட்பட 3 பேரை தேடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்