சென்னை: நள்ளிரவில் காவல் நிலையத்தில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட பெண்களால் அண்ணாநகரில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா நகர், 6-வது அவென்யூவில் உள்ள தனியார் பாரில், நேற்று முன்தினம் இரவு வடமாநிலத்தைச் சேர்ந்த 2 இளம் பெண்கள் மது அருந்தி உள்ளனர்.
அளவுக்கு அதிகமாக போதையில் இருந்த அவர்கள், நள்ளிரவான பின்னரும் பாரில் இருந்து வெளியேற மறுத்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக, பார் ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்கள் சாலையில் நின்றவாறு சத்தம் போட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த ரோந்து போலீஸார் அவர்களை எச்சரித்து ஆட்டோவில் அனுப்பிவைத்துள்ளனர். இருப்பினும் அப்பெண்கள், வீட்டுக்கு செல்லாமால், அருகில் இருந்த, அண்ணாநகர் காவல் நிலைத்துக்குள் நள்ளிரவில் நுழைந்தனர்.
பின்னர், அங்கிருந்த போலீஸாரிடம் குடிபோதையில், பார் மீது புகார் அளிக்க வேண்டும் என போதையில் கூச்சலிட்டனர். போலீஸார் அவர்களை விசாரிக்க முயன்ற போது, தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். விசாரணையில், அவர்கள் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த, 24 வயதுக்குட்பட்ட பெண்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களின் போனில் இருந்து, சூளைமேட்டை சேர்ந்த அவரது உறவுக்கார பெண்ணை அழைத்து, அவரிடம் பெண்களை ஒப்படைத்தனர். பின், நேற்று காலை அவர்களை வரவழைத்து எச்சரித்து போலீஸார் அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago