மாணவர்கள் தற்கொலை விவகாரம்: சென்னை ஐஐடி சார்பில் விசாரணை குழு அமைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மாணவர்கள் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் சென்னை ஐஐடி குழுஅமைத்துள்ளது. சென்னை ஐஐடியில் கரோனா பரவலுக்கு பிறகு மாணவர் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

இதற்கிடையே சென்னை ஐஐடியில் பிஎச்டி படித்து வந்தமேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவர் சச்சின் குமார் ஜெயின் கடந்த மார்ச் 31-ம் தேதி வேளச்சேரியில் அவர் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த மாணவரின் தற்கொலைக்கு அவரது வழிகாட்டி பேராசிரியருக்கும் நேரடி தொடர்உள்ளதாக மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டது.

இதுதவிர தொடர் தற்கொலை சம்பவங்களுக்கு ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் கோரிக்கைகளை ஏற்று மாணவர்கள் தற்கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு பிரத்யேக குழு அமைக்க ஐஐடி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

அதன்படி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை சென்னை ஐஐடி தற்போது அமைத்துள்ளது. அதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் டி.சபிதா, கண்ணகி பாக்கியநாதன், ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கீத்து மற்றும் ஆராய்ச்சி மாணவர் அமல் மனோகரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவிடம் தற்கொலை சம்பவம் தொடர்பாக தங்களின் புகார்களை மாணவர்கள் தெரிவிக்கலாம் எனவும் ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்