பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.98 லட்சம் மோசடி - வெளிநாட்டினர் உட்பட 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.98.28 லட்சம் மோசடி செய்ததாக வெளிநாட்டைச் சேர்ந்த பெண் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூரை சேர்ந்தவர் சிவக்குமார். பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவருக்கு கடந்த மார்ச் 22-ம் தேதி வாட்ஸ்-அப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து குறுந்தகவல் வந்தது. அதன் பிறகு வாட்ஸ்-அப் மூலமாக ஒருவர் பேசினார்.

அவர் மூளைப் புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருளை இமாச்சல பிரதேசத்தில் இருந்து தாங்கள் வாங்கி வந்ததாகவும், தற்போது அங்குள்ள நபரை தொடர்பு கொள்ள முடியாததால் அந்த மூலப் பொருட்களை வாங்கி தங்களிடம் கொடுத்தால் அதற்கான கமிஷனாக அதிகப்படியான தொகையை தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதை நம்பிய சிவகுமார், அவர்களின் வங்கி கணக்குக்கு மொத்தம் ரூ.98 லட்சத்து 28 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். அதன்பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இதுகுறித்து சிவகுமார் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின்படி, போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்கிலிருந்து ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்தை முடக்கம் செய்தனர். துணை ஆணையர் வனிதா அறிவுரையின்படி ஆய்வாளர் சொர்ணவல்லி தலைமையில், உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த், காவலர்கள் நவீன் கிருஷ்ணன், தனலட்சுமி, தங்கபாண்டி, ஹரிஹரசுதன், கருணாசாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் உதவி ஆய்வாளர் சையது ரபிக் சிக்கந்தர் தலைமையில் காவலர்கள் சத்தியேந்திரன், நவீன் குமார், சாதிக்பாட்சா ஆகியார் கொண்ட மற்றொரு தனிப்படைஅமைக்கப்பட்டு மும்பை, டெல்லி பகுதிகளில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த 19-ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த உமேஷ் ரமேஷ் விதாந்தே என்பவரை மும்பையில் கைது செய்தனர். பின்னர், கடந்த 20-ம் தேதி டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஓசே போஹின் லாரன்ஸ் என்பவரையும், உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்ணான நசபா சரோம் என்பவரையும், மேற்கு டெல்லியைச் சேர்ந்த முகேஷ் குமார் மிஸ்ரா என்பவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 24 செல்போன்கள், 8 சிம் கார்டுகள், 2 மடிக்கணினிகள், ஏடிஎம் கார்டுகள், 2 பாஸ்போர்ட்டுகள், ரூ.28 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் திருப்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்