கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்: ரகசிய புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில், பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் தெரிவிப்பதற்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனைக் கைது செய்தனர்.

அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், டாக்டர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் ரகசியமாக புகார் அளிப்பதற்காக விசாரணை குழு சார்பில் https://reachoutsupport.co.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், புகார்தாரரின் பெயர் மற்றும் செல்போன் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர், செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்து, புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இணையதளத்தில் அளிக்கப்படும் புகார்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்