கோவை | சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

By செய்திப்பிரிவு

கோவை: கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (25). இவர் 17 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதை அந்த சிறுமியிடம் ரதீஷ் தெரிவித்தபோது அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதைத்தொடர்ந்து, கடந்த 2020 ஜூலை 17-ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு ரதீஷ் வற்புறுத்தினார். அப்போது ரதீஷை அங்கிருந்து செல்லுமாறு சிறுமி கூறியுள்ளார். உடனே ரதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியை குத்தினார்.

இதைப்பார்த்த சிறுமியின் தந்தை ரதீஷை தடுத்தார். அவரையும் கத்தியால் குத்திவிட்டு, ரதீஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மறுநாள் சிறுமி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு (போக்சோ) வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.குலசேகரன் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், ரதீஷூக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 mins ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்