மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்

By என். சன்னாசி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையம் அருகே 17 வயதான மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாதிரியார் ஜோசப் ராஜாவுக்கு வாழ்நாள் சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் இன்று தீர்ப்பளித்தார்.

ராஜபாளையத்தில் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் ஜோசப் ராஜா(49). இவர் அதே பகுதியில் தனது தந்தை ஜோசப் செல்லப்பா நடத்தி வரும் சர்ச்சில் பாதிரியாராக இருந்து வந்தார். இந்த சர்ச்சுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் தனது மன வளர்ச்சி குன்றிய 17 வயது மகளுடன் தினசரி சென்று வந்தார். இந்நிலையில், கடந்த 2022- ம் ஆண்டு மே மாதம் 3- ம் தேதி சர்ச்சுக்கு தனியாக வந்த மனநலம் பாதித்த சிறுமிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை அளித்தார்.

சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தது குறித்து அவரது தாய் கேட்டபோது, பாதிரியார் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோசப் ராஜாவை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஜெ.கலா ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விசாரணை முடிவில், ”இந்த நீதிமன்றத்தில் 170 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் இரு வழக்குகள் மட்டுமே அரிதான வழக்காக வந்துள்ளது. மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கோயிலுக்கு செல்கின்றனர். மக்கள் செலுத்தும் காணிக்கையில் தான் கோயில்கள் கட்டப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றவாளியையும் அவரது தந்தையையும் நம்பி தங்களது பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் சிறுமியும் அவரது தாயும் வந்துள்ளனர். அவருக்கு நன்மை செய்வதாக கூறி ஜேசுராசா சிறுமியை ஏமாற்றியுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் பிறருக்கு முன் உதாரணம் ஆகிவிடக் கூடாது என்பதால் ஜேசுராஜாவுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார். அபராத தொகையை சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்