சென்னை பாரிமுனையில் கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் காயம் - மீட்புப் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ஆர்மேனியன் தெருவில் உள்ள மூக்கர் நல்லமுத்து தெருவில் ஒரு பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்டிடம் இன்று காலை திடீரென மளமளவென சரிந்துள்ளது. அப்போது கட்டிடத்தில் தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். உடனடியாக காவல் துறைக்கு தகவல் வந்தது. நாங்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தோம். ஆர்மேனியன் தெரு மிகவும் குறுகிய பகுதி என்பதாலும் பரபரப்பான தெரு என்பதாலும் தீயணைப்புத் துறையினருக்கு மீட்புப் பணிகள் சவாலாக அமைந்துள்ளது.

நிகழ்விடத்திற்கு உடனடியாக பொக்லைன் இயந்திரம் கொண்டுவந்த இடிபாடுகளை அகற்றுவது என்பது சவாலானதாக இருந்தது. தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மூத்த காவல் அதிகாரி ஆர்.வி.ரம்யா பாரதி (இணைய ஆணையர் வடக்கு) தலைமையில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE