திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திமுக கவுன்சிலர் மனைவி, மகள்களை அறையில் வைத்து பூட்டிவிட்டு, 16 பவுன் நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். திமுகவைச் சேர்ந்த இவர் 7-வது வார்டு பேரூராட்சிக் கவுன்சிலர். இவர், வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டில் மனைவி, 2 மகள்கள் மட்டும் இருந்தனர். நேற்று அதிகாலை கவுன்சிலர் கண்ணன் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, அவரது மனைவி, மகள்கள் அறை வெளியே பூட் டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, கண்ணன் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அவரது மனைவி, மகள்கள் தங்கியிருந்த அறையும் பூட்டப்பட்டிருந்தது.
மற்றொரு அறையில் பீரோவிலிருந்து 16 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் திருடப்பட்டிருந்தன. மேலும், வீட்டின் வளாகத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் பக்கத்து வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பத்தூர் டிஎஸ்பி ஆத்மநாபன் விசாரணை நடத்தினார்.
போலீஸார் கூறுகையில், கண்ணன் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு, அவரது மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றுள்ளனர். சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிள் நின்று விட்டதால், பக்கத்து வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர், என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago