விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் போலீஸாரின் கண்களில் மிளகாய் பொடி தூவி கொலை வழக்கில் கைதாகி சிகிச்சை பெற்று இருவரை மர்ம கும்பல் ஒன்று நேற்று இரவு சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது
.
திண்டுக்கல்லில் சின்னத்தம்பி என்பவர் கடந்த மாதம் பழிக்கு பலியாக ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திண்டுகலைச் சேர்ந்த யுவராஜ் குமார் (29), விக்னேஷ் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டு விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட போது இவர்கள் இருவருக்கும் கையில் வெட்டு காயம் ஏற்பட்டதால் யுவராஜ்குமாரும் விக்னேஷும் சிகிச்சைக்காக கடந்த மாதம் 22ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சின்னத்தம்பி கொலைக்கு பழிக்குபழி வாங்கும் நோக்கத்தில் இரு கார்களில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இரவு விருதுநகர் அரசு மருத்துவமனைக்குள் திடீரென நுழைந்தது.
மருத்துவமனையில் 4வது தளத்தில் சிகிச்சையில் இருந்த யுவராஜ்குமார் மற்றும் விக்னேஷை கொலை செய்ய திட்டமிட்ட கும்பல், அவர்கள் இருந்த வார்டுக்குள் நுழைந்தது. அப்போது அங்கு துப்பாக்கியுடன் காவலில் இருந்த திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் சிலம்பரசன், அழகுராஜ் ஆகியோர் முகத்தில் மர்ம கும்பல் மிளகாய் பொடியை வீசி உள்ளது. பின்னர், யுவராஜ்குமார் மீதும் விக்னேஷ் மீதும் மிளகாய் பொடியை தூவி மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டியது.
இதைப் பார்த்த அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடத் தொடங்கினர். சுதாரித்து எழுந்த காவலர்கள் மர்ம கும்பலை சுடுவதற்காக துப்பாக்கியை ஏந்தி குறி வைத்தனர். அப்போது காவலர்களை தாக்கிவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியது. இதனால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
» மதுரையில் மீட்கப்பட்ட 50 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி
» கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியவர் தற்கொலை
காயமடைந்த யுவராஜ்குமாரும் விக்னேஷும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு ஆளான காவலர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மாவட்ட எல்லை பகுதிகளிலும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டு நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
12 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago