புதுச்சேரி: புதுச்சேரி அருகே பெண் குழந்தையை மணலில் புதைத்து கொலை செய்துவிட்டு நாடக மாடிய தாயை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி பாகூர் அருகே மூர்த்திகுப்பம்-புதுக்குப்பம் இடையே சுடுகாட்டின் அருகே உள்ள பகுதியில், ஒரு குழந்தை யின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் வெளியே தெரிந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சீனியர் எஸ்பி நாரா சைதன்யா,எஸ்பி வம்சிதரெட்டி, பாகூர் இன்ஸ் பெக்டர் கணேஷ், கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்து நாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று , குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதனிடையே இத்தகவல் அறிந்து அங்கு வந்த தாய் சங்கீதா (22) குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், சங்கீதா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில், சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன்(32) என்பவரை இரண்டாவதாக சங்கீதா திருமணம் செய்தது தெரியவந்தது.
அதன்பிறகு கர்ப்பிணியான சங்கீதா குடும்பத்துடன் மூர்த்திக் குப்பம் புதுக்குப்பம் சமுதாய நலக்கூடம் அருகே வசித்து வந்தார். கடந்த 27 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையே குமரேசன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து, இந்தக் குழந்தை தனக்கு பிறக்கவில்லை எனக்கூறி, மனைவி சங்கீதா மீது சந்தேகமடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுபோல் நேற்று முன்தினம் இரவும் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா, கணவருடனான பிரச்சினைக்கு பிறந்த குழந்தையே காரணம் எனக்கருதினார். அன்று இரவு புதுக்குப்பம் சுடுகாட்டின் அருகே உள்ள பகுதிக்கு குழந்தையை கொண்டு சென்று மணலினுள் தலையை அழுத்தி புதைத்து கொலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் ஒன்றும் தெரியாதது போல் குழந்தையை காணவில்லைஎன நாடகமாடி, கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடியதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதை யடுத்து சங்கீதாவை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago