கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், திருபுவனத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட 8 மாத கர்ப்பிணியான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபுவனம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகநாதன் மகன் விக்னேஷ். ஒட்டுநரான இவருக்கும், பிளாஞ்சேரியைச் சேர்ந்த செவிலியர் படித்துள்ள துர்கா (20) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் உருவாகி கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. துர்கா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த துர்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த உறவினர்கள், துர்காவை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago