சேலம்: சேலத்தில் போலி கூட்டுறவு சங்கம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சேலம் மாவட்டம் சாமி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவராஜ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகே உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் எஸ்டிடபுள்யுசிஎஸ் (SDWCS) என்ற பெயரில் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உதவியாளர், மேலாளர் என பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக சமூக வலைதளங்களிலும், ஆன்லைன் மூலமாகவும் விளம்பரம் செய்திருந்தனர்.
இதனை நம்பி பலரும் அந்த நிறுவனத்துக்கு சென்று வேலை கேட்டபோது நிறுவனத்தின் மேலாளர் முருகன், நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமென்றால் பாதுகாப்பு வைப்பு தொகையாக ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும் என்றும், மாதம் தோறும் ரூ.45 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து பலரும் ரூ.3 லட்சம் வரை செலுத்தி பணியில் சேர்ந்தனர். ஆனால், ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வந்தனர். இதுகுறித்து கேட்டபோது முறையாக பதிலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, வேலைக்கு சேர்ந்தவர்கள் பணியை விட்டுவிட்டு, தாங்கள் அளித்த முன்பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால், பணம் வழங்காமல், மிரட்டி வருகின்றனர். இதேபோல, போலி கூட்டுறவு சங்கத்தை நம்பி பலரும் பல கோடி ரூபாயை ஏமாந்துள்ளனர். எனவே, மோசடி செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago