விருத்தாசலத்தில் மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவர் கொலை: சிறுவன் போலீஸில் சரண்

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மணலூரைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் விஜய் (35). இவரது மனைவி சித்ரா. இவர் நேற்று தனது குடியிருப்பு அருகே உள்ள கடைக்குச் சென்றார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் சித்ராவை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி சித்ரா தனது கணவர் விஜயிடம் கூறினார். இதனால் ஆவேசமடைந்த விஜய், சிறுவனிடம் இதுபற்றி கேட்டார். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென வீட்டிற்குள் சென்ற சிறுவன் கத்திஎடுத்து வந்து விஜய் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜயை அருகில் இருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஜய் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் சிறுவன் விருத்தாசலம் காவல் நிலை யத்தில் நேற்று மாலை சரணடைந்தான். கத்தியால் குத்திய சிறுவன் கஞ்சா போதையில் இருந்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு போலீஸார் கஞ்சா வழக்கில் சிலரை பிடித்துச் சென்றபோது சிறுவனையும் பிடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்