நத்தம்: கோபால்பட்டி அருகே ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபி. இவரது மனைவி தமயந்தி (45). தனியார் தொண்டுநிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கோபிக்கும், அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே இரண்டு ஏக்கர் பூர்வீகச் சொத்தைப் பாகப் பிரிவினை செய்வதில் பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
நேற்று மாலை வழக்கறிஞரை பார்ப்பதற்காக தமயந்தி திண்டுக்கல்லுக்கு தனியார் நகர பேருந்தில் சென்றார். பின்தொடர்ந்த கோபியின் அண்ணன் ராஜாங்கமும் அதே பேருந்தில் ஏறினார். கோபால்பட்டியை அடுத்துள்ள வடுக்கப்பட்டி அருகே பேருந்து சென்றபோது, தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து தமயந்தியை குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார்.
இதைப் பார்த்து அச்சத்துடன் சக பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சாணார்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய ராஜங்கத்தை தேடிவருகின்றனர்.
» நிர்வாக ரீதியிலான நிலைப்பாட்டை வெளியில் தெரிவிப்பதா? - ஆளுநர் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
» நடைபயிற்சியை வலியுறுத்தும் வாக்கரூ `வாக் இந்தியா வாக்' பரப்புரை திட்டம்
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago