விருதுநகர்: திருச்சுழி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள ஆனைக்குளத்தைச் சேர்ந்தவர் பகவதி (47). தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது மனைவி சாரதா. பகவதி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததை அறிந்த அம்மன்பட்டியைச் சேர்ந்த அஜித், கண்ணார்பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன், மறைக்குளத்தைச் சேர்ந்த பாலகுமார் ஆகியோர் அவரை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பகவதியும் அவர்களுக்கு பயந்து பணம், நகையை கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பகவதியிடம் திருட்டு நகைகள் உள்ளதாகக் கேள்விப்பட்டு, அஜித் உள்ளிட்ட 3 பேரும், அவரது வீட்டுக்கு வந்து மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
காத்தான்பட்டி பெரியண்ண சுவாமி கோயில் சமையல் கூடத்துக்கு அழைத்துச் சென்று நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால், அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜித் உள்ளிட்டோர் பகவதியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிந்து அஜித் உள்ளிட்ட 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago