சிதம்பரத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்கத் தலைவர் மீது கொலை வெறி தாக்குதல்

By க.ரமேஷ்

கடலூர்: தமிழ்நாடு அரசு நியாய விலை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் ஜெயச்சந்திரன் ராஜா (54). இவரது சொந்த ஊர் கீழ் அனுவம்பட்டு ஆகும். தற்பொழுது இவர் சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரவு சிதம்பரம் மானா சந்து அருகே இவர் பைக்கில் சென்றபோது அவரை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள் பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வீட்டுக்கு திரும்பினார்.

இது குறித்து அவர் சிதம்பரம் நகர போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்.5) காலை சுமார் 10 மணியளவில் பைக்கில் மெய் காவல் தெருவில் சென்று கொண்டிருந்த ஜெயச்சந்திரனை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரது பைக்கை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் தலை, கை உள்ளிட்ட உடம்பின் பல இடங்களில் பலத்த காயமடைந்த ஜெயச்சந்திரன், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் குறித்து தகவலறிந்த சிதம்பர நகர போலீஸார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயச்சந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்