சென்னை | வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற எஸ்ஐ, காவலர் பணியிடை நீக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை:சென்னையில் விதிமீறல் தொடர்பாக அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீஸாரில் சிலர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், திருமங்கலம் போக்குவரத்து போலீஸார், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த லஞ்சத்தை அங்குள்ள போலீஸ் பூத் ஒன்றில் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் உத்தரவிட்டார்.

விசாரணையில் திருமங்கலம் போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ ஜெய்சங்கர், முதல்நிலை காவலர் பாலாஜி ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்