சென்னை | ஆட்டோவில் கடத்திய 2 கிலோ தங்கம் பறிமுதல்: சாலையில் வீசிவிட்டு தப்பியவருக்கு வலை

By செய்திப்பிரிவு

சென்னை: ஆட்சியர் அலுவலகம் அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸாரை பார்த்ததும் தங்கத்தை சாலையில் போட்டுவிட்டு தப்பிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று அதிகாலை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவில் பயணித்த இளைஞர் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர் கையில் வைத்திருந்த பை குறித்து கேட்டபோது ஆட்டோவில் இருந்து குதித்து பையுடன் ஓடினார்.

சிறிது தூரம் சென்றதும் பையை கீழே போட்டுவிட்டு கடற்கரை ரயில் நிலையத்துக்குள் ஓடிய நபர், அங்கு சென்று கொண்டிருந்த ரயிலில் ஏறி தப்பினார். இளைஞர் போட்டுவிட்டுச் சென்ற பையை போலீஸார் சோதனை செய்தபோது, அதில் 2 கிலோ எடையுள்ள 3 தங்கக் கட்டிகள் இருந்தன. இது தொடர்பாக வடக்கு கடற்கரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டது கடத்தல் தங்கமா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தங்கத்தை சாலையில் போட்டுவிட்டு தப்பி ஓடியவரைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்