கோவை: கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். இதேபோல கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை ஆர்.ஜி.புதூரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன் (19). தனியார் கல்லூரி மாணவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. புவனேஸ்வரன், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் சின்னியம்பாளையத்துக்குச் சென்றார். அப்போது அங்கு இருந்த சில இளைஞர்களுக்கும், புவனேஸ்வரன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதில் புவனேஸ்வரன் உயிரிழந்தார். அவரது நண்பர் சந்தோஷ்குமார் என்பவர் காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரித்து, மாதவன், மணி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: கோவை மாவட்டம் கிழக்கு அரசூரில் உள்ள மதுரைவீரன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (40). கூலித்தொழிலாளி. இவர், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று அதிகாலை மதுரைவீரன் கோயில் வீதி வழியாக தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (45), தாமரை தம்பதியின் வீட்டு வழியாக சென்ற போது அங்கிருந்த தட்டியை ரங்கசாமி தட்டி விட்டுச் சென்றதாக தெரிகிறது. இதைக்கண்ட தம்பதி, ரங்கசாமியிடம் வாக்குவாதம் செய்ததோடு, அவரை கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சூலூர் போலீஸார் கொலை வழக்கு பதிந்து கோவிந்தராஜ், தாமரையை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago