சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் ‘ஹிஜாவு’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 15 சதவீதம் வட்டித்தொகை தருவதாக பொதுமக்களிடையே கவர்ச்சியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இதனை நம்பி 89 ஆயிரம் பேர் முதலீடு செய்தனர். இந்நிலையில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.4,400 கோடி வரை இந்த நிறுவனம் மோசடி செய்ததாக பணத்தை இழந்தவர்கள் சென்னை அசோக் நகரில் இயங்கிவரும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார்கள் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஹிஜாவு நிறுவனம் மற்றும் அதன் 19 துணை நிறுவனங்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், தலைவர், துணை நிறுவனத்தின் இயக்குநர்கள், கமிட்டி உறுப்பினர்கள், ஏஜெண்டுகள், அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 31 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் நிறுவனத்தின் தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ரவிச்சந்திரனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் தனது பெயரிலேயே சென்னை அண்ணாநகர் மேற்கில் துணை நிறுவனத்தை நடத்தி ரூ.300 கோடி வரை முதலீடு பெற்று ஹிஜாவு நிறுவனத்துக்கு அனுப்பி உள்ளதும், இதன்மூலம் அவர்களுக்கு கிடைத்த கமிஷன் தொகையில் 2 சொகுசு கார்கள் வாங்கி உள்ளதும் தெரியவந்தது.
மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ரூ.5 கோடியிலும், ரூ.2 கோடியில் தேவக்கோட்டையில் நிலம் மற்றும் காரைக்குடியில் வீடும் கட்டி உள்ளதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
» ஈமு கோழி வளர்ப்பு தொழில் மோசடி | நிறுவன இயக்குநர் உட்பட 2 பேருக்கு சிறை: ரூ.2.83 கோடி அபராதம்
» சொத்து தகராறில் விபரீதம் - வேட்டை துப்பாக்கியால் சுட்டு அண்ணனை கொன்ற தம்பி கைது
இதையடுத்து போலீஸார் அதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான ஹிஜாவு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அலெக்சாண்டர், அவரது மனைவியும், இயக்குநர்களில் ஒருவருமான மகாலட்சுமி உள்ளிட்டோரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்த மோசடி வழக்கு தொடர்பாக 13 ஆயிரம் புகார் மனுக்கள் வந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் விரைவில் தங்களது புகார் மனுவை அளிக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago