ஓசூர்: ஓசூரில், ‘கஞ்சா சாக்லேட்’ தயாரித்து விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ஓசூரில், ‘கஞ்சா சாக்லேட்’ விற்பனை செய்யப்படுவதாக நகரப் போலீஸாருக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து, எஸ்.ஐ. பிரபாகரன் தலைமையிலான போலீஸார் பழைய பெங்களூரு சாலையில் நேற்று முன்தினம் இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் கஞ்சா மற்றும் ‘கஞ்சா சாக்லேட்’கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில், ஏரித் தெருவைசேர்ந்த பெட்டிக்கடை உரிமையாளர் சந்துரு(30), கர்னூர் கணேஷ் (38) சாந்தி நகர் ஆட்டோ ஓட்டுநர் ஜமீர்(45) மற்றும் வாசகி நகரில் டிபன் கடை நடத்தி வரும் சபரி(35) ஆகிய 4 பேரும் சேர்ந்து, ‘கஞ்சா சாக்லேட்டை’ தயாரித்து, ஆட்டோக்கள் மூலம் ஓசூர் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். 600 கிராம், ‘கஞ்சா சாக்லேட்’, 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago