ஆற்காடு: ஆற்காடு அருகே முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் சக்கரமல்லூர் அடுத்த எசையனூர் கிராமம் இலுப்பை சாலையைச் சேர்ந்தவர் ஈஸ்வரப்பன். இவரது மகன்கள் குணசீலன் (38), கோபிநாதன் (30). இவர்கள் இருவரும் முன்னாள் ராணுவ வீரர்கள்.
கோபிநாதனுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரியைச் சேர்ந்த ரம்யா (24) என்பவருக்கும் திருமணமானது. கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா, கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், ரம்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாய் சரஸ்வதி மற்றும் தம்பி கிஷோருடன் (22) குணசீலன் வீட்டுக்கு வந்தார்.
அங்கு இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கிஷோர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து, குணசீலனை குத்தினார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பூட்டுத்தாக்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 26-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆற்காடு கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரம்யா மற்றும் சரஸ்வதியை ஏற்கெனவே கைது செய்தனர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தலைமறைவாக இருந்து வந்த கிஷோரையும் காவல்துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில், ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர் காண்டீபன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆற்காடு-செய்யாறு சந்திப்பு சாலையில் நின்றிருந்த கிஷோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
46 mins ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago