கும்பகோணம் அருகே தனியாக வசித்துவந்த பெண் கொடூர கொலை; போலீஸ் விசாரணை

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: பாபநாசத்தில் தனியாக வசித்துவந்த பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். பாபநாசம் வட்டம், பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி செல்வமணி (55). இவரது கணவர் உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் திருமணமான 3 மகள்கள் உள்ளனர்.

ஒரு மகன் வெளிநாட்டிலும் மற்றொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியாக வசித்து வரும் செல்வமணி ஆன்மிகப் பற்றின் காரணமாக கடந்த 24-ம் தேதி திருச்செந்தூர் செல்வதாக அருகில் உள்ளவரிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவரது மகள் ராஜலட்சுமி,நேற்று இரவு வீட்டிற்குச் சென்றபோது வீட்டின் கதவு பூட்டி இருந்தது, உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது. பின்னர் ,அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது செல்வமணி தண்ணீர் நிரம்பிய பித்தளை பானைக்குள் தலை கீழாக மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர்கள் இளமாறன், ராஜேஷ், முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் கொடூர கொலைக்கு அவரது உறவினர்களே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் விசாரணை செய்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

47 mins ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்