ஈரோடு | பவானி ஆற்றில் மிதந்து வந்த தலை துண்டிக்கப்பட்ட உடலால் பரபரப்பு: கவுந்தப்பாடி போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

ஈரோடு: கவுந்தப்பாடி அருகே பவானி ஆற்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மிதந்து வந்த உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப் பாடியை அடுத்த பெருந்தலையூர் வழியே செல்லும் பவானி ஆற்றில் நேற்று முன்தினம், அப்பகுதி மக்கள் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அழுகிய நிலையில் தலை, கை, கால்கள் இல்லாமல், 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் ஆற்றில் மிதந்து வந்தது. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் ஆய்வக நிபுணர்களுடன் அங்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து உடலைக் கைப்பற்றி, பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பவானி ஆற்றில் கைப்பற்றப்பட்ட உடலில் தலை மற்றும் கை, கால்கள் வெட்டப்பட்டு இருந்தது. சத்தியமங்கலம், கோபி, பவானி உள்ளிட்ட பகுதிகளில் காணாமல் போனவர்கள் குறித்த புகார் மனுக்களின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்