திருப்பத்தூர் அருகே தாய், மகன் கொலை

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டில் தாய், மகன் கொலை செய்யப்பட்டனர். திருப்பத்தூர் அருகேயுள்ள துவார் பூமலைக் கண்மாய் பகுதியைச் சேர்ந்த சாத்தையா மனைவி அடக்கி (46). கணவர் இறந்த நிலையில் மகன் சின்னக்கருப்பனுடன் (26) வசித்து வந்தார். அடக்கி கூலி வேலை செய்து வந்தார். சின்னக்கருப்பன் ஓட்டுநராகப் பணியாற்றினார்.

இந்நிலையில் நேற்று காலை அடக்கியை விவசாய வேலைக்கு அழைப்பதற்காக, அவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிகப்பி சென்றார். ஆனால் வாசலில் அடக்கியும், வீட்டுக்குள் கட்டிலில் சின்னக்கருப்பனும் காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் சம்பவ இடத்துக்குச் சென்றார். தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. முன்விரோதக் கொலையா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து நெற்குப்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்