திருப்பூர் | பிரசவித்த பெண்ணுக்கு உதவுவதுபோல நடித்து அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்திய பெண் கைது

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் குழந்தையை போலீஸார் மீட்டனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் செரங்காடு பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு கடந்த 19-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கடந்த 25-ம் தேதிகுடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண்ணுக்கு, 40 வயது மதிக்கத்தக்க ஒரு கர்ப்பிணி உதவியாக இருந்துள்ளார்.

சில மணி நேரங்களில் கர்ப்பிணி, குழந்தையுடன் மாயமானார். அதிர்ச்சியடைந்த தாய் மற்றும் அவரது உறவினர்கள், திருப்பூர் தெற்கு போலீஸாரிடம் புகார் அளித்தனர். புகாரை வழக்கு பதிந்து, அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அதில், குழந்தையை ஒரு பெண் கடத்திச்சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த புகைப்படங்களை போலீஸார் சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு, விசாரணையை துரிதப்படுத்தினர்.

இதுதொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸாரை ஒருவர் தொடர்பு கொண்டு, குழந்தை கடத்தல் வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் பெண் இடுவாய்பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் (42) என்றும், இவர் தனது உறவினர்என்றும் தகவல் கொடுத்தார். இதையடுத்து இடுவாய் பகுதிக்கு சென்றபோலீஸார், பாண்டியம்மாளை கைது செய்து, குழந்தையை மீட்டனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘பாண்டியம்மாளுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை நம்ப வைத்துள்ளார். இதனால் ஏதேனும் குழந்தையை கடத்திவந்து தனக்கு பிறந்த குழந்தை என அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்துவிடலாம் என பாண்டியம்மாள் திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து திருப்பூர் அரசுமருத்துவமனையில் நோட்டம்விட்டு, பிரசவமான பெண்ணுக்கு உதவி செய்வதுபோல நடித்து குழந்தையை கடத்தியுள்ளார்’’ என்றனர். கடத்தல் சம்பவம் நிகழ்ந்த 12 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணை கைது செய்து, குழந்தையை தெற்கு போலீஸார் மீட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்