கோவில்பட்டி: விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவரது கடையின் பின்புறம் வழியாக 2 பேர் கயிறு மூலம் உள்ளே இறங்குவதை அருகிலுள்ள கடையின் இரவு காவலாளி நாகலாபுரத்தை சேர்ந்த நாகராஜ்(58) என்பவர் பார்த்துள்ளார். இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கும், ராஜ்குமாருக்கும் அவர் தகவல் அளித்தார்.
விளாத்திகுளம் போலீஸார் அங்கு விரைந்து வந்து, இருவரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது வெள்ளி பொருட்களும், தங்க நகைகளும் இருந்தன.
விசாரணையில், அவர்கள் விளாத்திகுளம் அருகே வள்ளிநாயகிபுரம் காலனி தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (34), மார்த்தாண்டம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (36) என்பது தெரியவந்தது.
2 நாட்களுக்கு முன்பே நகைகளை திருடுவதற்கு ஏதுவாக கதவுகளை உடைக்கும் கேஸ் கட்டர் இயந்திரங்களை நகைக்கடையின் மாடியில் இவரும் கொண்டு வைத்துள்ளனர். பின்னர் ஏற்கெனவே திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் கடையின் பின்புறம் வழியாக கயிறு மூலம் மாடிக்கு சென்று பதுங்கி இருந்துள்ளனர்.
» பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி
அதிகாலை 2 மணிக்கு மேல் நகை கடையின் கதவுகளை கேஸ் கட்டர் இயந்திரம் மூலம் உடைத்து உள்ளே சென்று வெள்ளிப் பொருட்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 13.6 பவுன் நகைகள், 25 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.12,500 ரொக்கப் பணம், கேஸ் கட்டர் இயந்திரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.
இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்து, முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களுக்கு வேறு ஏதும் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago