சென்னை: மது போதையில் பேருந்துக்கு அடியில் படுத்து ரகளையில் ஈடுபட்ட பெண்களால் திருவல்லிக்கேணியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே வாலாஜா சாலையில் மார்ச் 17-ம் தேதி நள்ளிரவு 6 இளம் பெண்கள் மது போதையில் அந்த வழியாகச் சென்ற நபர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர்.
மேலும், அந்த வழியாக வந்த மாநகர அரசுப் பேருந்தின் முன்படுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அதோடு நின்றுவிடாமல் சரக்கு வாகனம் ஒன்றையும் மறித்து தகராறில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து திருவல்லிக்கேணி போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். இதற்கிடையே தகராறில் ஈடுபட்டிருந்த 6 பேரில் 3 பேர் அங்கிருந்து நழுவினர். மீதமுள்ள 3 இளம் பெண்களும் தடுக்க வந்த போலீஸாரிடமும் ரகளை செய்தனர். ஒரு கட்டத்தில் போலீஸாரையே ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.
இதையடுத்து பெண் போலீஸார் வரவழைக்கப்பட்டு ரகளையில் ஈடுபட்ட 3 பெண்களையும் காவல் ரோந்து வாகனத்தில் ஏற்றி, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர், போதை தெளித்த பிறகு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
திருமண வரவேற்பாளர் பணி: இதில், தகராறில் ஈடுபட்டது கண்ணகி நகரைச் சேர்ந்த இளம்பெண்கள் சோனாலி, சுதா ராணி,ரம்யா என்பதும், இவர்கள் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற திருமண விழாவில் வரவேற்பாளர்களாக பணி செய்து முடித்துவிட்டு மது அருந்தியது தெரியவந்தது.
இதையடுத்து உறவினர்களை வரவழைத்து 3 பேரையும் மறுநாள்காவல் நிலையம் அழைத்து வர வேண்டும் என உத்தரவிட்டு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழங்கும் பதியப்பட்டது.
இந்நிலையில், சோனாலி கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் தனது தோழி சுதா ராணிவீட்டுக்குக் காதலன் மணிகண்டனுடன் சென்றுள்ளார். அப்போது அவர்கள் மீண்டும் மது அருந்தியுள்ளனர். அப்போது, காதலனுக்கும் சோனாலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரம் அடைந்த சோனாலி, மதுபாட்டிலை உடைத்து தனது கழுத்தை கீறிக் கொண்டதோடு, 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கும் முயன்றார். இதில், 2 கால்கள் மற்றும் இடுப்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago