விழுப்புரம் | அன்புஜோதி ஆசிரம வழக்கு: கைதான நிர்வாகி உள்பட 3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான நிர்வாகி உள்பட 3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே குண்டலப் புலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட் டோர், ஆதரவற்றோர் அடித்துதுன்புறுத்தப்பட்டது; அங்கிருந்தபெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டது; ஆசிர மத்தில் இருந்த சிலர் மாயமானது என அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த புகார்களின் அடிப்படை யில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் பிஜூமோன் மற்றும் ஆசிரம பணியாளர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, மரியா ஜூபின், பிஜூமோன், சதீஷ், அய்யப்பன், கோபிநாத் ஆகிய 6 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி அவர் களிடமிருந்து வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 6 பேரையும் மீண்டும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்கள், தங்களுக்கு ஜாமீன்வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், பணியாளர் சதீஷ் ஆகிய 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஜூபின்பேபி, சதீஷ் ஆகிய இருவரையும் விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் இருந்து சிபிசிஐடி போலீஸார் அழைத்து வந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதுபோல் கடலூர் சிறையில் இருக்கும் மரியாஜூபினும் விழுப்புரம் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், பணியாளர் சதீஷ் ஆகிய 3 பேருக்கும் மேலும் 14 நாட்கள் அதாவது, வருகிற 30-ம் தேதி வரை காவலை நீட்டித்து நடுவர் புஷ்பராணி உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேரும் மீண்டும் சிறை யில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்