திண்டுக்கல் | லாரியை கடத்தி ஓட்டுநரிடம் ரூ.11.65 லட்சம் பறிப்பு

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே லாரியை கடத்திச் சென்று ஓட்டுநரிடம் ரூ.11.65 லட்சம் பறித்துச் சென்ற கும்பலை தாடிக்கொம்பு போலீஸார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். தக்காளி வியாபாரி. இவர், ஒசூரில் இருந்து தக்காளி கொள்முதல் செய்து வர அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன்(54) என்பவரிடம் ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினார். அவருடன் மற்றொரு ஓட்டுநர் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும் சென்றார்.

ஆலங்குளத்திலிருந்து புறப்பட்ட லாரி, திண்டுக்கல் அருகே நான்குவழிச் சாலையில் காமாட்சிபுரம் பிரிவில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரியை முந்திச் சென்ற கார் ஒன்று வழிமறித்து நின்றுள்ளது. காரில் 4 பேர் இருந்துள்ளனர்.

அதிலிருந்து இறங்கிய 2 பேர் லாரியில் ஏறி, பாலகிருஷ் ணனையும், சதீஷ்குமாரையும் ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர், லாரியை திண்டுக்கல் மாவட்ட எல்லையான விடுதலைப்பட்டிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.

அவர்களை காரில் மற்ற 2 பேர் பின் தொடர்ந்துள்ளனர். விடுதலைப்பட்டி பிரிவு அருகே லாரியை நிறுத்தச் சொன்ன கொள்ளையர்கள் 2 பேரும், பாலகிருஷ்ணன் வைத்திருந்த ரூ.11.65 லட்சத்தை பறித்துக் கொண்டும், லாரி சாவி, ஓட்டுநர்கள் இருவரின் மொபைல் போன்களை எடுத்துக் கொண்டும் காரில் தப்பினர். லாரி ஓட்டுநர்கள், நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. லாரியில் பணம் கொண்டு செல்லப்படுவதை அறிந்த ஒருவர், இந்த கொள்ளையின் பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்