கோவை | பிஹார் தொழிலாளி கொலையில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் கைது

By செய்திப்பிரிவு

கோவை: தவறான நட்பு காரணமாக பிஹாரை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வடமாநில தொழிலாளர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். சடலத்தை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் இறந்தவர் பிஹாரை சேர்ந்த சஞ்சய் சவுத்ரி என்பதும், கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சஞ்சய் சவுத்ரியின் சித்தப்பா மகன் முகேஷ் ஷானி கோவையில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கும், சஞ்சய் சவுத்ரியின் மனைவிக்கும் தவறான நட்பு இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

மனைவியை தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தியபோது ஏற்பட்ட தகராறில், முகேஷ் ஷானி மற்றும் அவரது நண்பர் குபேந்திரன்(29) ஆகியோர் சேர்ந்து, சஞ்சய் சவுத்ரியை தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். நேற்று இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

வட மாநில தொழிலாளர்களின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் நடந்த இக்கொலை சம்பவத்தில், குற்றவாளிகளை 24 மணி நேரத்துக்குள் கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மற்றும் உயரதிகாரிகள் பாராட்டினர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

8 hours ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்